News July 2, 2024

தருமபுரி: மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது

image

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், இலவச பட்டா, வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து 631 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

Similar News

News September 12, 2025

தர்மபுரி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்<<>> / மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 12, 2025

தருமபுரி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)

News September 12, 2025

தர்மபுரியில் நாளை மறுதினம் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

தர்மபுரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில், தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படி, நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை, இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!