News July 2, 2024
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஜவாஹிருல்லா கண்டனம்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த அவரது பதவிக்காலத்தை, ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி?

➤அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் ➤அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள் ➤அவர்களின் சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்டுங்கள் ➤குழந்தை முன் வீட்டில் சண்டையிடுவதை தவிருங்கள் ➤அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் ➤சின்ன சின்ன முடிவுகளை அவர்களே எடுக்கட்டும். அவர்களுடைய Decision making திறன் வளரும். அனைத்து பெற்றோருக்கும் SHARE THIS.
News November 18, 2025
சேமிப்புக்கான பழக்கங்கள்

இன்று நாம் செய்யும் சிறிய செயல்களும், முடிவுகளும் நாளை நமக்கு பெரிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கொடுக்கும். குறிப்பாக பணத்தை கையாளுவதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை தாண்டி, சேமிப்பும், முதலீடும் நமக்கு பெரும் பயனளிக்கும். என்னென்ன சேமிப்பு பழக்கம் நமக்கு தேவை என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 18, 2025
குரூப் 2 பணியிடங்கள் 1,270-ஆக அதிகரிப்பு

குரூப் 2, 2ஏ காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 1,270-ஆக அதிகரித்து TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு குறித்து ஜூலை 15-ல் அறிவிப்பு வெளியான போது 645 காலிபணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 625 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்.28-ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


