News July 2, 2024
ஆட்சியரகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

உலக மக்கள் தொகை தினம் வரும் ஜூலை.11 அன்று கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், அனைத்து துறைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், உலக மக்கள் தொகை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்தனர்.
Similar News
News November 5, 2025
தருமபுரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
தருமபுரியில் கத்திரிக்காய் தொடர் விலை உயர்வு

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர்-1ஆம் தேதி ஒரு கிலோ கத்திரிக்காய் ₹50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நவம்பர்-5 தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக, ஒரு கிலோவிற்கு ₹15ரூபாய் வரை விலை உயர்ந்து. 1 கிலோ கத்திரிக்காய் ₹65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News November 5, 2025
தருமபுரி: அரசு மருத்துவமனையில் புதிய வரவு!

தருமபுரி மாவட்டம், பென்னாகர வட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புதிதாக நவீன பெட் அமைக்கப்பட்டது. இவ்வகையான பெட்டுகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற வகையிலும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த வகையிலும் இந்த பெட்டை பயன்படுத்த முடியும். மேலும் அவசர காலத்தில் பெட்டுகளை ஸ்ட்ரக்சர் ஆகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


