News July 2, 2024

மூன்று படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்

image

மறைந்த நடிகர் விஜயகாந்த், விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்கவைக்கப்பட்டுள்ளார். இதுதவிர விஜயகாந்த், மேலும் இரண்டு படங்களிலும் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் திரைக்கு வர உள்ளார். அவரது மகன் சண்முகப் பாண்டியன் நடித்துவரும் ‘படைத்தலைவன்’, மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜயகாந்த் ஏஐ மூலம் மீண்டும் வருகிறார்.

Similar News

News November 25, 2025

தீவிர பயிற்சியில் ஹிட்மேன் ரோஹித்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ODI தொடருக்கு தயாராகும் விதமாக ஹிட்மேன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவில் கடந்த 5-6 நாள்களாக முகாமிட்டுள்ள ரோஹித், Nets-ல் நீண்ட நேரம் சுழல், வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும், உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக ஜிம்மில் பயிற்சி செய்து 3 கிலோ எடையை குறைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 25, 2025

மருத்துவத்தில் இந்தியாதான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா?

image

மருத்துவ சேவையில் இந்தியா உலகளவில் சிறந்து விளங்குகிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் சிகிச்சைகள் விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன. இதில், வியப்பான தகவல் என்னெவென்றால், அமெரிக்காவை விட இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அமெரிக்காவை விட இந்தியாவில் குறைந்த செலவில் செய்ய முடியும் சில சிகிச்சைகளை மேலே, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 25, 2025

தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

image

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!