News July 2, 2024

பொய்யும் வெறுப்பும்தான் ராகுல் காந்தி: நட்டா

image

மக்களவையின் முதல் நாளில், மோசமான நிகழ்ச்சி அரங்கேறியதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். “பொய் + இந்து வெறுப்பு = மக்களவையில் ராகுல் காந்தி” என X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவைத் தேர்தல் தீர்ப்பை ராகுல் காந்தி புரிந்துகொள்ளவில்லை, அல்லது அவரிடம் பணிவு இல்லை என்பதை மக்களவையில் இன்றைய அவரது பேச்சு காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

பைக்கின் பின் இருக்கை உயரமாக இருப்பது ஏன்?

image

பைக்கின் பின்பக்க இருக்கையை உயரமாக வைப்பது ஸ்டைலுக்காக மட்டுமல்ல. அதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ➤பைக்கின் பின்பக்க இருக்கை உயரமாக இருக்கும்போது எடை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும் ➤பைக்கை திடீரென ஆக்சிலரேட் செய்யும்போது Pillion Rider பின்னால் விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு ➤பள்ளங்களில் வண்டியை இறக்கி ஏற்றும்போது அசௌகரியமாக இருக்காது. 99% பேருக்கு இது தெரியாது என்பதால் SHARE THIS.

News November 24, 2025

TN-ல் பாஜக, RSS காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை

image

பிஹார் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அது பிஹார், இது தமிழ்நாடு எனக் கூறியுள்ள அவர், பிஹாரில் பாஜக, JDU ஆளுங்கட்சியாக இருந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக, RSS எப்போதும் காலூன்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

MLA கொலை வழக்கு: பவாரியா கும்பலுக்கு ஆயுள் தண்டனை

image

2005-ல் அதிமுக MLA-வாக இருந்த சுதர்சனம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், குற்றவாளிகள் ராகேஷ், ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2005-ல் MLA சுதர்சனத்தை கொன்றுவிட்டு அவரது மனைவி, மகனை கொடூரமாக தாக்கிவிட்டு 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

error: Content is protected !!