News July 1, 2024

15 பிடிஓகள் பணியிட மாற்றம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வ.வளர்ச்சி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜோசப்கென்னடி, அரக்கோணம் வ.வளர்ச்சி அலுவலராகவும், நெமிலி வ.வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிர வேலு ஆற்காட்டுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவக்குமார் வாலாஜாவுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவராமன் கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளராகவும் என மாவட்ட முழுவதும் 15 பிடிஓகளை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

ராணிப்பேட்டையில் சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணன்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தம்பி பச்சையப்பனை தாக்கி கொலை செய்த அண்ணன் மனோகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று (செப்.12) தீர்ப்பளித்தது. நிலத் தகராறு காரணமாக 2015ஆம் ஆண்டு பச்சையப்பனை கொன்ற வழக்கில் மனோகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயமங்கலம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தார்.

News September 13, 2025

ராணிப்பேட்டை: சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

image

ராணிப்பேட்டை, வாலாஜாவைச் சேர்ந்த செந்தில்நாதன் (44) என்பவர் டியூஷனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த அவரை, திருச்செந்தூரில் சாமியார் வேடத்தில் திரிந்தபோது போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News September 13, 2025

அண்ணல் அம்பேத்கர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் நபர்களிடம் இருந்து, அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருது பெற விரும்பும் நபர்கள், விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும்.

error: Content is protected !!