News July 1, 2024
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இழிவான கருத்துகளால் பெரும்பான்மையான மக்களை காங்கிரஸ் இழிவுப்படுத்துவதாக சாடிய அவர், சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் வழிகளை, INDIA கூட்டணியினர் தொடர்ந்து செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, பாஜகவினரை உண்மையான இந்துக்கள் இல்லை என ராகுல் கூறியிருந்தார்.
Similar News
News September 21, 2025
அமெரிக்கா உடன் ஒப்பந்தம் எட்டப்படுமா?

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் விவசாயப் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்பும் நிலையில், அதில் ஏற்கனவே இந்தியா தன்னிறைவை அடைந்துவிட்டதால், பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
News September 21, 2025
இதுதான் இந்தியாவின் ஒரே எதிரி: PM மோடி

பிற நாடுகளை சார்ந்து இருப்பதுதான் இந்தியாவின் ஒரே எதிரி என PM மோடி தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை பிறநாடுகளின் கைகளில் ஒப்படைக்க முடியாது, சுயசார்பை அடைவதுதான் இதற்கான ஒரே மருந்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் H1B விசாவிற்கான கட்டணத்தை 2 மடங்காக டிரம்ப் உயர்த்தியதற்கு மத்தியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
டிராமாவை தொடங்கிய பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. இதற்கு முன்னதாக, நேற்று இருநாட்டு கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் சென்றது போல், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. முன்னதாக, நடுவரை மாற்றினால் தான் விளையாடுவேன் என டிராமா செய்து, UAE உடனான போட்டியை தாமதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.