News July 1, 2024
தேர்தல் செலவினங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(1.7.24) காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ், இ.வ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
Similar News
News September 9, 2025
குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆலைகளில் விரைவில் ஆய்வுகள் நடைபெற உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை உத்தரவின் பேரில், குடிநீர் தரம் மற்றும் சுத்தம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.
News September 9, 2025
காஞ்சிபுரம்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

காஞ்சிபுரம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்கள் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
News September 9, 2025
காஞ்சிபுரம்: பணக் கஷ்டம் நீங்க…

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூர் பகுதியில் கள்வப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் கள்வப்பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தயிர்சாத நெய்வேத்தியம் படைத்து விஷேச பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என நம்பப்படுகிறது. பணக் கஷ்டத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவுங்க!