News July 1, 2024
இந்திய மாணவர் சங்கம் நாடு தழுவிய போராட்டம்

திருவாரூர் மாவட்டம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேசிய தேர்வு முகமையில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து, நாடு தழுவிய போராட்டம் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று இன்று அறிவித்துள்ளது. மேலும் மத்திய பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்பு போன்ற துறைகளுக்கு நுழைவுத் தேர்வு என்ற முறையில் குளறுபடி செய்யும் NTA என்ற அமைப்பை கண்டித்து மாவட்ட தலைநகரம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
திருவாரூர் பள்ளிகளில் தொடங்கிய காலாண்டு தேர்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வு தொடங்கியது. மாநில பள்ளி கல்வித் துறையின் அட்டவணை படி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி 25-ம் தேதி வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
News September 10, 2025
திருவாரூர்: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
திருவாரூர் காவல் துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு: “GET UNLIMITED INTERNET OFFER FOR ONE YEAR. SEND THE 6 DIGIT CODE TO THIS NUMBER” இது போன்ற குறுஞ்செய்தி மூலம் கேட்கப்படும் OTP எண்களை பகிர வேண்டாம். குற்றவாளிகள் மற்றும் மோசடி இணைய தளம் மூலம் வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே OTP எண்களை பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.