News July 1, 2024
மக்களை ஏமாற்றும் முயற்சி வேண்டாம் – எல் முருகன்

ஓசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கபடவிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஓசூர் அருகிலேயே பெங்களூர் விமான நிலையம் உள்ளது. எனவே ஓசூரில் விமான நிலையம் அமைப்பது சாத்தியமாக இருக்காது. மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு செயல்படக் கூடாது என்று கூறினார்.
Similar News
News September 10, 2025
சூளகிரி: திரௌபதியம்மனை 14கிராம மக்கள் வழிபாடு!

சூளகிரி அடுத்த பந்தர் குட்டை கிராமத்தில் 14ஊர் கிராம மக்கள் சார்பாக திரௌபதியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கிராம மக்கள் சார்பில் விஷேச பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவது வழக்கம் என்கிற நிலையில் முருக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தலையில் சீர் சுமத்தப்படி கோயிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
News September 10, 2025
பாலியல் தொல்லை.. எம்எல்ஏ உதவியாளர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் கால்வேஹள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உதவியாளர் அதியமான், ஹசன் அலி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மதியழகன் தன் உதவியாளர் பணியில் இருந்து அதியமானை நேற்று நீக்கினார்.
News September 10, 2025
கிருஷ்ணகிரி: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே இங்கே <