News July 1, 2024

தென்காசியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத. இதனால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நாளை முதல் 6ஆம் தேதி வரை ஒரு சில தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.

Similar News

News September 12, 2025

தென்காசி: எடப்பாடியை கண்டித்து போஸ்டர்

image

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மதுரை விமான நிலையம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி அரசியல் ஆதாயம் தேடும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டிப்பதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

News September 12, 2025

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு சிறை

image

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சார்ந்த ஏழுமலை என்பவர் அவரது மனைவி கலா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி மேற்கொண்ட வழக்கில் தென்காசி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டல் பபிதா ஏழுமலைக்கு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு.

News September 12, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று செப்டம்பர் 11ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!