News July 1, 2024

கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினா் தங்களுக்குத் தேவையான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Similar News

News September 12, 2025

தி.மலை: 8th pass போதும்! உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News September 12, 2025

தி.மலை: மான் வேட்டையாடிய நபர் கைது

image

தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு ரோந்து சென்றது. அப்போது, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெருமாள் என்பவர் மான் வேட்டையாடியது தெரியவந்தது. அவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 12, 2025

தி.மலை: இளைஞர் விபரீத முடிவு

image

செய்யாறு கொடநகர், அரச மரம் தெருவைச் சேர்ந்த திலீப் (26), பாலிடெக்னிக் பட்டதாரி. செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. வயிற்று வலி அதிகமானதால், நேற்று (செப்.11) பெட்ரோல் நிலையத்தின் பின்பக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செய்யாறு காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எதற்கும் தற்கொலை தீர்வு அல்ல.

error: Content is protected !!