News July 1, 2024
வேட்பாளா்களின் கணக்குகள் சமா்பிப்பு

புதுச்சேரி மக்களவை தோ்தலில் 26 போ் போட்டியிட்டனா். தோ்தலில் அவா்கள் செலவழித்த தொகையை, இப்போது சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி
போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் செலவினக் கணக்குகளை, ஆட்சியர் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன், மத்திய தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் முகமது மன்சூருல் ஹசன், லட்சுமிகாந்தா ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
Similar News
News August 10, 2025
புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 – 2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் இந்த <
News August 10, 2025
புதுச்சேரி: கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு!

புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில், நடைபெறவுள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் வரும் 25 மற்றும் 28 ம் தேதிகளில் புனே, பலேவாடியில் நடக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்பர். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க தகுதியானவர்கள். SHARE IT
News August 10, 2025
புதுச்சேரி: தமிழ்நாடு கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் தழைக்க மீண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் திரள் போராட்டத்தை தி.மு.கழகம் முன்னெடுக்க நேரிடும் என்றும் புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.