News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண் துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

Similar News

News September 12, 2025

பெரம்பலூர்: விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கல்

image

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் செப்.,13-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பின்பு பிரச்சாரத்தை துறையூர் சாலை மேற்கு வானொலி திடல் பகுதியில் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

News September 11, 2025

சிறுபான்மையினருக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறியவும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 141 பயனாளிகளுக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News September 11, 2025

முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்

image

இன்று (11.09.2025) பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை மற்றும் பென்னகோணம் ஊராட்சி களுக்கு திருமாந்துறை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடைன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் திடீரென போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!