News July 1, 2024
திருப்பதி ரயில் ரத்து

திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி- காட்பாடி இடையே இன்று முதல் ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
திண்டிவனத்தில் துணிகர திருட்டு!

மதுராந்தகம் தாலுக்கா கரசங்கால் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் தரணி பாபு இவர் தனது பைக்யை திண்டிவனம் மேம்பாலத்திற்கு கீழே நிறுத்திவிட்டு தனது நண்பரை பார்க்க சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திண்டிவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
விழுப்புரம்: இனி பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
செஞ்சி அருகே மர்ம விலங்கால் பரபரப்பு!

செஞ்சி அருகேயுள்ள நாகந்தூர் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளை கட்டி வளா்த்து வருகிறாா். இந்நிலையில், நேற்று (ஜன-27)காலையில் பிரகாஷ் வயலுக்கு சென்று பாா்த்தபோது, அங்கு மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.


