News July 1, 2024
ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பால் கொள்முதலில் தொய்வு இருந்ததாகக் கூறிய அவர், தற்போது ஒன்றியங்களில் மட்டும் நாளொன்றுக்கு 36லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் சில ஆவின் கிளைகள் திறக்க உள்ளதற்கான தேவைகள் இருப்பதாகக் கூறிய அவர், பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.
Similar News
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது

இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 23, 2025
-40°C குளிரில் இந்திய நகரம் PHOTOS

டிராஸ், கார்கில் மாவட்டத்தில் உயரமான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள நகரம். இது, பூமியில் மக்கள் வாழும் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்று. இங்கு, குளிர்காலத்தில் வெப்பநிலை, இயல்பாகவே -20°C முதல் -30°C வரை செல்லும். இந்நிலையில், 3 நாள்களுக்கு முன், – 40°C-க்கு குறைந்தது. இதன்மூலம், டிராஸ் உலகின் 2-வது குளிர்பகுதியாக மாறியுள்ளது. மேலே உள்ள இதன் அழகிய போட்டோஸை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.


