News July 1, 2024
மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!

TANGEDCOஇன் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் செலுத்துதல், மின் கட்டணம் அறிதல் உள்ளிட்ட பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் TANGEDCO மொபைல் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர், மொபைல் எண் கொடுத்து OTP மூலம் Log in செய்ய வேண்டும். பிறகு, உங்கள் Consumer No கொடுத்து, ஆன்லைன் பேங்கிங் மூலம் எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம். கட்டண விவரங்களையும் அறிய முடியும்.
Similar News
News September 20, 2025
இந்தியாவில் பலவீனமான PM உள்ளார்: ராகுல் காந்தி

நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான PM உள்ளார் என்று ராகுல் காந்தி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். USA-வின் H-1B விசாவை பெறுவதற்கான கட்டணம் ₹90 லட்சம் என்று கடுமையாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார். அதேபோல், நாட்டை பாதுகாப்பதில் தான் வெளியுறவு கொள்கை இருக்க வேண்டும் என்று கார்கேயும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News September 20, 2025
வில்வித்தை விளம்பர தூதரான ராம் சரண்

உலகிலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி (Archery Premier league) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த லீக்கின் விளம்பர தூதராக ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் மேடை வரை ஏறியதால் ராம் சரண் சர்வதேச ரசிகர்களையும் கொண்டுள்ளார். தன்னை விளம்பர தூதராக நியமித்ததற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறி ராம் சரண் நெகிழ்ந்துள்ளார்.
News September 20, 2025
தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைக்கும் விஜய்

ஈழத் தமிழர்களுக்காக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார் விஜய். 2008-ல் முள்ளிவாய்க்கால் படுகொலையை எதிர்த்து 1 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார். 2024-ல் முள்ளிவாய்க்கால நினைவு தினத்தன்று ’மாவீரம் போற்றுதும்’ என பதிவிட்டு அதிர்வலையை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது நாகை பிரசாரத்தில் ஈழத்தமிழர்களின் உயிரும் முக்கியம் என கூறி தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைத்துவருகிறார்.