News June 30, 2024

அசைக்க முடியாத ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி: ஜடேஜா

image

இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வலிமையான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, தன்னால் முடிந்ததை நாட்டிற்காக செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது டி20 உலகக்கோப்பை கனவு நனவானதாகவும், அனைத்து நினைவுகளுக்கும், ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News September 20, 2025

வங்கி வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS

image

சேவை கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. பல கோடி மக்கள் வாழும் நாட்டில், வங்கிகளின் அதிக சேவை கட்டணத்தால், குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, டெபிட் கார்டு, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு, தாமத பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான சேவை கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியது. ஆனால், அதற்கான வரம்பை RBI நிர்ணயிக்கவில்லை.

News September 20, 2025

BREAKING: விஜய் கூட்டத்திற்குள் புகுந்தது ஆம்புலன்ஸ்

image

நாகையில் தவெக தலைவர் விஜய் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தபோது, கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்துள்ளது. உடனே அக்கட்சியின் தொண்டர்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இதேபோல் ஏற்கனெவே, விஜய் தனது முதல் பரப்புரையை திருச்சியில் மேற்கொண்டபோதும், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் புகுந்தது குறிப்பிடத்தக்கது.

News September 20, 2025

அமைப்பின் பெயரை மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா?

image

பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது பாகிஸ்தான் பிரிவு பெயரை ’அல் முராபிதூன்’ என மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் நிதி திரட்டுவது கடினமாக இருக்கிறதாம். இதனால், பெயரை மாற்றி e-wallet, UPI போன்ற டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டி, 4 பில்லியன் பாக்., ரூபாய் சேகரித்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!