News June 30, 2024
10ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2015 ஜூன் 29ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மெட்ரோவில் தற்போது வரை 29 கோடியே 87 லட்சம் பேர் இதில் பயணம் செய்துள்ளனர். மேலும், 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
சென்னையில் 6 மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
News September 11, 2025
சென்னை மெட்ரோ பச்சை வழித்தட சேவையில் தற்காலிக மாற்றம்

மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை (செப்.15 -19) வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, காலை 5 மணி முதல் 6 மணி வரை இந்தப் பகுதியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 6 மணி முதல் வழக்கமான அட்டவணைப்படி சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
பூவை ஜெகன் மூர்த்தி கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

சிறுவனை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது வழக்கு விசாரணை செப்.17 ஒத்திவைக்கப்பட்டது.