News June 30, 2024
முதல்வர் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க உள்ளார்? எல்.முருகன்

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். எந்த நிறுவனம், எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க அவர் செல்கிறார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், முதல்வரின் ஸ்பெயின் பயணத்தால் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார். முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் TRB ராஜா கூறியிருந்தார்.
Similar News
News September 20, 2025
மசூதி மீது ட்ரோன் தாக்குதல்: 75 பேர் துடிதுடித்து பலி!

சூடானில் மசூதி மீது RSF(துணை ராணுவம்) நடத்திய ட்ரோன் தாக்குதலில், 75 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மே 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும், Rapid Support Forces (RSF) அமைப்பிற்கும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. நாட்டின் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை பதவி நீக்கிய பிறகு, அதிகார பகிர்வு தோல்வியடைந்ததால், இரு அமைப்புக்கும் இடையே போர் வெடித்துள்ளது.
News September 20, 2025
உதயசூரியன், இரட்டை இலையால் பறிபோன கட்சிகள்

6 ஆண்டுகளாக தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை EC ரத்து செய்துள்ளது. திமுகவின் உதயசூரியன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளான ஈஸ்வரனின் கொமதேக, ஜவாஹிருல்லாவின் மமக, தமிமுன் அன்சாரியின் மஜக, ஜான்பாண்டியனின் தமமுக அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் இவர்களின் நிலைபாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News September 20, 2025
RECIPE: சுவையான, ஹெல்தியான கம்பு கட்லட்!

கம்பு & உருளைக்கிழங்கை ஒன்றாக வேகவைத்து, பின்னர் மசித்துக் கொள்ளவும் *இவற்றுடன் துருவிய கேரட் & காலிஃபிளவரை சேர்த்து தண்ணீர் விட்டு, 10 நிமிடங்கள் வேக வைக்கவும் *இதில், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா & உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும் *இந்தக் கலவையை கட்லெட் வடிவில் தட்டி, எண்ணெய்யில் பொறித்தெடுத்தால், சுவையான கம்பு கட்லட் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.