News June 30, 2024
பெரம்பலூர் ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் மொத்தம் 184.81 ஏக்கர் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்பப் படிவங்கள், வீடு வீடாக வழங்கும் பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கெடுப்பு படிவங்களை, வழங்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025