News June 29, 2024

நாளை முதல் மருத்துவ முகாம்

image

தமிழகம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாளை முதல் மருத்துவ முகாம் நடைபெறும் என்று மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கட்டுமான பணிகள் நடைபெறு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். இந்த முகாமில் வெளிமாநில தொழிலாளர்கள் பங்கேற்று, பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News September 20, 2025

இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

image

இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சுரேகா யாதவ் ஓய்வு பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியை தொடங்கினார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சரக்கு ரயில், பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

News September 20, 2025

அடுத்த ஆண்டு சீனா செல்லும் டிரம்ப்

image

இந்தியா உடன் விரோதத்தை வளர்க்கும் டிரம்ப், சீனாவுடன் நட்பை வளர்க்கிறார். கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்குடன் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் கொரியாவில் நடக்க உள்ள ஆசிய பசிபிக் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும், சீனாவிற்கு அடுத்த ஆண்டு பயணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 20, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 20, புரட்டாசி 4 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.

error: Content is protected !!