News June 29, 2024
காய்கறிகளின் விலை மளமளவென குறைந்தது

தமிழகத்தில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்றாடம் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளின் விலை எகிறியதால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ₹44, பீன்ஸ், அவரை ₹70, முருங்கைக் காய், சின்ன வெங்காயம் ₹40, முள்ளங்கி, உருளை ₹30, கத்திரி, வெண்டை, கோஸ், புடலங்காய் கிலோ ₹16-₹20 வரை விற்கப்படுகிறது.
Similar News
News September 19, 2025
ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை: இபிஎஸ்

ராசிபுரம் பரப்புரையில் பேசிய இபிஎஸ், தனது சுற்றுப் பயணத்தை பார்த்து CM ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை என்று பகடி செய்துள்ளார். மேலும், பிங்க் பஸ்ஸில் வந்து தன்னை வீழ்த்தப் போவதாக உதயநிதி பேசியிருப்பதாக குறிப்பிட்ட அவர், முதலில் அரசு பஸ்களை சரியாக பராமரிக்கட்டும் என்று விமர்சித்தார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்றும் அவர் விமர்சித்தார்.
News September 19, 2025
டாய்லெட்டில் செல்போன் யூஸ் பண்றீங்களா..

செல்போனை ஒரு நொடி கூட பிரிந்து இருக்க முடியாத பலர் கழிப்பறைக்கும் எடுத்துச் செல்கின்றனர். நீங்களும் அந்த லிஸ்ட்ல இருந்தா இந்த தகவல் உங்களுக்குதான். நீண்ட நேரம் கழிப்பறையில் உட்கார்ந்திருப்பது மூலநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்னு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் பல பாக்டீரியாக்கள் உங்கள் போனில் தொற்றிக்கொள்ளவும் வாய்ப்புள்ளதாம். மனநலன் சார்ந்த சிக்கலும் வரலாமாம். Be Careful
News September 19, 2025
ஆயுதப் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்: மாவோயிஸ்டுகள்

ஆபரேஷன் ககர் மற்றும் என்கவுண்டர் நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தினால், ஆயுதப் போராட்டத்தை கைவிட தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் (அபய்) பெயரில் கடிதம் வெளியானது. இந்நிலையில், மாவோயிஸ்ட் செய்தி தொடர்பாளர் ஜெகன் வெளியிட்டுள்ள கடிதத்தில், அபய் அப்படி சொன்னது தனிப்பட்ட விஷயம். நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். அம்மாதிரியான முறைகள் இயக்கத்தை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.