News June 29, 2024

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

image

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் மா, தென்னை போன்ற மரங்கள் அதிக எண்ணிக்கையில் காய்ந்து கருகின. மேலும் மகசூலும் பாதிக்கப்பட்டது. காய்ந்த மரங்களுக்கான இழப்பீட்டை இயற்கை உரமாக இல்லாமல், ரொக்கமாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Similar News

News September 10, 2025

சூளகிரி: திரௌபதியம்மனை 14கிராம மக்கள் வழிபாடு!

image

சூளகிரி அடுத்த பந்தர் குட்டை கிராமத்தில் 14ஊர் கிராம மக்கள் சார்பாக திரௌபதியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கிராம மக்கள் சார்பில் விஷேச பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவது வழக்கம் என்கிற நிலையில் முருக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தலையில் சீர் சுமத்தப்படி கோயிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

News September 10, 2025

பாலியல் தொல்லை.. எம்எல்ஏ உதவியாளர் கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கால்வேஹள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உதவியாளர் அதியமான், ஹசன் அலி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மதியழகன் தன் உதவியாளர் பணியில் இருந்து அதியமானை நேற்று நீக்கினார்.

News September 10, 2025

கிருஷ்ணகிரி: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே இங்கே <>கிளிக்<<>> செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!