News June 28, 2024
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பெண்களுக்கான திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என அரசு ப்ளீடர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்கள்!

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை திமுக அடுத்தடுத்து இழுத்து வருகிறது. Ex அமைச்சர் அன்வர் ராஜா, Ex MP மைத்ரேயன் வரிசையில், ஜெயலலிதாவுக்கு அரசியல் உரை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜும் திமுகவில் இணைந்துள்ளது அக்கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பலர் திமுகவில் இணைய உள்ளதாக மருது அழகுராஜ் குண்டு ஒன்றையும் வீசியுள்ளார். யார் யார் இணைய வாய்ப்புள்ளது?
News September 19, 2025
Robo Shankar-ன் நிலைமை வராமல் இருக்க இத கவனியுங்க

மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு தோல், கண்கள் & உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு ‘பிலிருபின்’ தான் காரணம். பிலிருபின் என்பது சிவப்பு ரத்த அணுக்கள் உடையும்போது உற்பத்தியாகும் ஒரு மஞ்சள் நிறமி. 3 காரணங்களால் இது வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. ➤கல்லீரல் நோய் ➤பித்த நீர் அடைப்பு ➤ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான்.
News September 19, 2025
RECIPE: ஹெல்தியான பச்சை பயறு புலாவ்!

*குக்கரில் நெய் விட்டு, மிதமான தீயில் கசகசா, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலாப் பொருள்களை சேர்த்து வதக்கவும் *பிறகு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும் *இதில், தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து, அரிசி- பச்சைப்பயறு கலவையை சேர்த்து 3 விசில் வரை காத்திருந்தால், சுவையான பச்சைப்பயறு புலாவ் ரெடி. SHARE IT.