News June 28, 2024

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்

image

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தேவையான முதலீட்டை ஈர்த்து வருவார் என்றும் இதன் மூலம் தமிழ்நாடு தொழில்துறையில் புதிய வளர்ச்சியை எட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Similar News

News March 7, 2026

இதுபோல் அரசியல் செய்ய மாட்டோம்: சீமான்

image

தமிழகத்தில் பணவசதி படைத்தவன்தான் அரசியல் செய்ய முடியும்; வாக்குக்கு காசு கொடுக்காதவர்கள் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். பணம் இருக்கிறவன்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் உழைக்கும் மக்களுக்கான அரசியலோ, அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது என்றார். பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நாங்கள் வரவில்லை; மக்களுக்கு நல்லாட்சி தர வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

News March 7, 2026

மகளிர் உரிமைத்தொகை ₹25,000.. வங்கிக்கு வந்தது!

image

முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹25,000 வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கோவை, கொண்டம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி 2025 ஜூலையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பெயர் ஏற்கெனவே KMUT-ல் இருந்துள்ளது. மகேஸ்வரியின் வங்கி கணக்கிற்கு பதிலாக UP-ஐ சேர்ந்த சாந்திதேவியின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. இதனால், சப்-கலெக்டர் உத்தரவால் ஒரே தவணையாக ₹25,000 வழங்கப்பட்டது.

News March 7, 2026

விஜய்க்கு எதிராக இவரை நிறுத்த திட்டமா?

image

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், அத்தொகுதியை விசிக தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தொகுதி தங்களுக்கு கிடைத்தால், அங்கு விஜய்க்கு எதிராக ஆளூர் ஷா நவாஸை நிறுத்தவும் ஆலோசனை நடக்கிறதாம். ஆனால் மறுபக்கம், விஜய் அங்கு நின்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், திமுக வேட்பாளரே கூட அங்கு களம்காண வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

error: Content is protected !!