News June 28, 2024
APPLY NOW: +2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Navik & Yantrik பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 22. கல்வித் தகுதி: +2, Diploma தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3. இணையதளம்: <
Similar News
News January 26, 2026
FLASH: நாளை வங்கிகள் இயங்காது!

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாளை நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
News January 26, 2026
பழமா… ஜூஸா? எது பெஸ்ட் தெரியுமா?

பழங்களில் இயற்கை சர்க்கரையும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ஆனால், அதனை ஜூஸ் ஆக்கும்போது நார்ச்சத்துக்கள் உடைகின்றன. ஒரு கிளாஸ் ஜூஸுக்கு இரண்டு, மூன்று பழங்களை பிழிவதால் அளவுக்கதிகமான சர்க்கரை உடலில் சேர்கிறது. பழங்களை அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள கலோரிகளில் 10% அதனை செரிமானம் செய்ய காலியாகிவிடும். ஆனால், ஜூஸாக குடிக்கும்போது அத்தனை கலோரியும் உடலில் சேர்ந்து தீங்கு விளைவிக்கிறது.
News January 26, 2026
சிக்கன் விலை குறைந்தது

கூலி உயர்வு கேட்டு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், கடந்த வாரம் சிக்கன் கிலோ ₹320 வரை விற்கப்பட்டது. தற்போது, அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால், விலை குறையத் தொடங்கியுள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ₹155-ல் இருந்து ஒரே வாரத்தில் ₹120 ஆக சரிந்துள்ளது. இதனால், கடைகளில் சிக்கன் கிலோ 240-க்கு கீழ் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் விலை என்ன?


