News June 28, 2024
சென்னையில் மேற்குவங்க தீவிரவாதி கைது

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி அனோவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த அவர், கோயம்பேட்டில் தலைமறைவாகி கட்டுமான வேலை செய்து வந்துள்ளார். அரசுக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது உள்ளன. அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவான ‘அன்சார் அல் இஸ்லாம்’ தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில் இருந்த அவரை, மேற்குவங்க போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
நேற்றைய மேட்ச்சில் நடந்த 7 மேஜிக்!

T20I WC அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேட்ச்சில் நிகழ்ந்த 7-ம் நம்பரின் மேஜிக்கை பலரும் கவனித்திருக்க மாட்டோம். உடனே ‘தோனி வந்தாரு.. அதானே’ என எண்ண வேண்டாம். வேறு சில சுவாரசிய விஷயங்கள் உள்ளன. அது என்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe பண்ணுங்க. கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
ரெடியா மக்களே? ஜூலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஜூலை 17-ல் தொடங்குகிறது. இப்பணிகள் 45 நாட்கள்(ஆக.30 வரை) நடைபெறும் என தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு திட்டங்களை வகுக்கவும், செயல்படுத்தவும் எடுக்கப்படும் இந்த கணக்கெடுப்பில், வீட்டின் சூழல், சொத்துகள், வசதி தொடர்பான 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து குடும்பத்தினரும் ரெடியா இருங்க!
News March 6, 2026
முடி அதிகமா கொட்டுதா? இத சாப்பிட்டா போதும்!

முடி வளரவில்லை என்பதற்காக கண்ட கிரீம்களையும் தலைக்கு தேய்க்குறீங்களா? நீங்கள் எவ்வளவு செய்தாலும், சரியான உணவு முறையை பின்பற்றாத வரை உங்களுக்கு எந்த ரிசல்ட்டும் கிடைக்காது என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் முட்டை, கேரட், சக்கரவள்ளி கிழங்கு, நெல்லிக்காய் & வாரத்திற்கு 2 முறை கீரை சாப்பிடுங்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


