News June 28, 2024

ஜோ பைடனை முந்திய டிரம்ப்

image

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடன், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதம் செய்வது அமெரிக்காவில் வழக்கம். இன்று நடைபெற்ற நேரடி விவாதம் தொடர்பாக 565 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 67% மக்கள் டிரம்புக்கும், 33% மக்கள் ஜோ பைடனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 8, 2026

கள்ளக்குறிச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA

image

அதிமுக முன்னாள் MLA இளையக்கண்ணு திமுகவில் இணைந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஏற்காடு சட்டமன்ற தொகுதி MLA-வாக பதவி வகித்த இளையக்கண்ணு, அதிமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். EPS மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

News March 8, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!