News June 28, 2024

சுந்தர் பிச்சையை ஓரம் கட்டிய நிகேஷ் அரோரா

image

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் 10 சி.இ.ஓ.,க்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை நிகேஷ் அரோரா பெற்றுள்ளார். C-Suite Comp வெளியிட்ட அறிக்கைப்படி, $151.4 மில்லியனை ஊதியமாக (CAP) பெற்ற Palo Alto Networks சி.இ.ஓ., நிகேஷ் அரோரா பட்டியலில் 10ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளார். சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இப்பட்டியலில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா இடம்பெறவே இல்லை.

Similar News

News March 22, 2026

நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பஸ்

image

தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவத்தில், சுதாரித்த 60 பயணிகளும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 22, 2026

சிக்கிமில் லேசான நிலநடுக்கம்

image

சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.46 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் ஏற்கெனவே பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2026

நிலக்கரி உற்பத்தியில் இந்தியா சாதனை

image

இந்தியா தொடர்ந்து 2-வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது. எரிசக்தி துறையில் நாடு சுயசார்பு அடைந்து வருவதற்கு இது முக்கிய சான்றாக அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு போதுமான அளவு பராமரிக்கப்படுவதால், அதிகரித்து வரும் நாட்டின் மின் தேவையை திறம்பட எதிர்கொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!