News June 28, 2024
₹21 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) ₹21 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற அரிய சாதனையை படைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் RIL பங்கின் மதிப்பு1.5% உயர்ந்து ₹3129 ஆக இருந்தது. ஜியோ ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், ரிலையன்ஸ் பங்குகள் தொடர்ந்து லாபம் அடைந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில், ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 20% அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 17, 2026
99660 44425.. இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுங்க!

உங்களின் PF நிதியில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை அறிய Website-ல் Log In செய்து கஷ்டப்பட வேண்டாம். ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா? PF-ல் ரெஜிஸ்டர் செய்துள்ள போன் நம்பரில் இருந்து ‘99660 44425’ என்ற நம்பருக்கு ஒரு Missed Call கொடுங்க. உங்களின் PF பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்ற மெசேஜ் வந்துவிடும். பலரும் அறியாத இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News March 17, 2026
இண்டக்ஷனை பயன்படுத்த மத்திய அரசு பரிந்துரை

LPG சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முடிந்தவரை இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. நுகர்வோர்கள் முடிந்தவரை LPG பயன்பாட்டைக் குறைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், நகர்புற மக்கள் PNG-க்கு மாற கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பல இடங்களில் மக்கள் பதற்றம் காரணமாக அவசர அவசரமாக கேஸ் புக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
News March 17, 2026
விஜய்யுடன் கூட்டணி.. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்

புதுச்சேரி அரசியல் களம் கடைசி நேரத்தில் திருப்பத்தை சந்தித்துள்ளது. NR காங்., – பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லஜகவை கூட்டணியில் சேர்த்தால், தாங்கள் வெளியேறுகிறோம் என ரங்கசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என NR காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் அறிவித்துள்ளார்.


