News June 28, 2024
மக்களவையில் ஆஃப் செய்யப்பட்ட ராகுலின் மைக்?

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்கக்கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. இதற்கு, மக்களவையில் சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய பதிலை, நாடாளுமன்றத்தின் மூலமாக வழங்கவேண்டும் என்றார். ராகுல் பேசிக்கொண்டிருக்கையில், அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 3, 2026
+2 மாணவர்களே இதை தெரிஞ்சுக்குங்க!

நேற்று தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடர்பான புகார்களை மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வர சென்னையில் ‘தேர்வு கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது. இது காலை 8 மணி – இரவு 8 மணி செயல்படும். 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. SHARE IT..
News March 3, 2026
விஜய்யை கஷ்டப்பட்டு வளர்த்த SAC: ஜெயக்குமார்

பெரிய கோடீஸ்வரர்களின் வீட்டுக்கு மட்டுமே விஜய் செல்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஏழை வீட்டு கல்யாணத்துக்கு விஜய் போயிருக்கிறாரா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவர் பணக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு தான் போவார் என்று விமர்சித்தார். 7 தயாரிப்பாளர்களை உருவாக்கிய விஜய், தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தை SAC-ஐ தயாரிப்பாளர் ஆக்காதது ஏன் எனவும் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.
News March 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


