News June 28, 2024
விதி எண் 110 என்றால் என்ன?

விதி எண் 110 என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 208ஆவது பிரிவின் 1ஆவது உட்பிரிவின்படி, இயற்றப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்றாகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளைப் பற்றி அவசர அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதனை அவை விதி எண் 110இன் கீழ் அறிவிக்கலாம். இந்த அறிவிப்பின் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால், அது குறித்து எந்த விதமான விவாதமும் நடத்தப்பட மாட்டாது.
Similar News
News October 20, 2025
மிக கனமழை வெளுத்து வாங்கும்:IMD

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது 48 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்.
News October 20, 2025
இயக்குநர் அவதாரம் எடுத்த விஷால்

‘மகுடம்’ படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இது கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்ற அவர், பொறுப்பின் காரணமாக எடுக்கப்பட்டதே எனவும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கும் கடமைப்பட்டு, இப்படத்தை நிறைவாக இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரிலீஸாகியுள்ளன.
News October 20, 2025
குழந்தைகள் திக்குறாங்களா? சரி செய்ய Easy Tips

திக்குவாயை சரி செய்ய டாக்டரை அணுகுவது அவசியம் என்றாலும், இதற்கு சில பயிற்சிகளும் இருக்கிறது. ➤எழுத்துக்களை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி பழக வேண்டும் ➤மூச்சு பயிற்சி செய்வது உதவலாம் ➤வாக்கியங்களை வேகமாக படிக்கலாம் ➤பாடல்கள் பாடுவதும் உதவும். குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணலாமே!