News June 28, 2024
சர்வதேச பொறுப்பை ஏற்கும் முதல் இந்தியர்

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Nexus ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் இயக்குநர் குழுத் தலைவராக ஜி. சீனிவாச ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் சர்வதேச தலைவராக பணியாற்றி வரும் அவர், கி மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ- வாகவும் உள்ளார். விற்பனைக்குப் பிந்தைய வாகன சேவைகளை வழங்கிவரும் ஆட்டோமோட்டிவ் துறையில் இந்தியர் ஒருவர் சர்வதேச பொறுப்பை ஏற்றுக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News August 21, 2025
முதல்முறையாக இந்தியா வரும் ஃபிஜி PM

ஃபிஜி நாட்டின் PM சிடிவேனி லிகமமடா ரபுகா, முதல்முறையாக ஆக.24-ல் இந்தியா வருகிறார். ஆக.26 வரை இங்கு இருக்கும் அவர், ஜனாதிபதி முர்மு, PM மோடியைச் சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. மேலும் டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ‘அமைதி பெருங்கடல்’ (Ocean of peace) என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
News August 21, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17471264>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. சுகுமார் சென்.
2. 1608.
3. திருமூலர்.
4. தமிழ்.
5. வெறுங்கை அல்லது வெறுங்கயுடன் விளையாடுதல்.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க.
News August 21, 2025
இந்த நடிகை போல நீ ஆகணும்.. டார்ச்சர் செய்த கணவர்!

‘நடிகை நோரா பதேகி போல நீ மாறணும்’ என கூறி உ.பி.யை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை கொடுமை செய்துள்ளார். தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி, இல்லையென்றால் அன்று சாப்பாடு கட் என கண்டிஷன்களை வைத்தவர், கர்ப்பிணியான அவருக்கு சீக்ரெட்டாக கருக்கலைப்பு மாத்திரையும் கொடுத்துள்ளார். இந்த கொடுமையை அனுபவிக்க அப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு 50 லட்சம் வரதட்சணை கொடுத்துள்ளனர். இவர்களை என்ன சொல்வது?