News June 28, 2024
கல்யாண செலவை எங்கள் தலையில் கட்டுறீங்களே?

ரிலையன்ஸ் ஜியோ கட்டண விலையை (₹50 தொடங்கி ₹600) பெருமளவில் உயர்த்தியதன் காரணமாக நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதன் காரணமாக அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானியை சமூக வலைதளங்களில் டேக் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12ஆம் தேதி நடக்கவிருக்கும் பிரம்மாண்ட திருமணத்தின் செலவை எங்கள் தலையில் கட்டுறீங்களே? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Similar News
News March 20, 2026
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.
News March 20, 2026
கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

கத்தாரின் <<19423057>>எரிசக்தி நிறுவனங்கள்<<>> மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கத்தார் PM ஷேக் தமிம் பின் ஹமாத்திடம் அவர் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அப்போது, அங்குள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறிய PM மோடி, அப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலவ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.


