News June 28, 2024
நீலகிரி: சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வருவாய், காவல், நெடுஞ்சாலை துறை மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News October 30, 2025
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
கோத்தகிரியில் உயிரிழக்கும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள் (ம) பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் கோத்தகிரி பகுதியில் போது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றை கால்நடைகள் உண்ணுவதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News October 30, 2025
கோத்தகிரி அருகே மதுவால் நேர்ந்த சோகம்

கோத்தகிரி அருகே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(42). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுப்பழக்கத்தை கைவிட முடியாத மன உளைச்சலில் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


