News June 28, 2024
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தனித்தீர்மானம்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நீட் அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டதாக கூறிய அவர், அதனால் தான் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்தார். நீட் தேர்வில் உண்மையான விளைவுகளை உணர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
Similar News
News November 9, 2025
இறந்த பின்னும் ரத்த ஓட்டம்.. இந்தியாவில் முதல் முறை!

ஒருவர் இறந்த பின்பு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுப்புகளை எடுக்காவிட்டால், அதை பயன்படுத்த முடியாது. பொதுவாக, மூளைச்சாவு ஏற்பட்டதும் உறுப்புகள் தானமாக பெறப்படும். இந்நிலையில், டெல்லியில் இறந்த பெண் ஒருவரின் உறுப்புகளை தானமாக பெற, இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் டாக்டர்கள். HCMCT ஹாஸ்பிடலில், ECMO கருவி மூலம் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, ஆசியாவிலேயே முதல் முறையாக சாதனை படைத்துள்ளனர்.
News November 9, 2025
ஆபாச மார்பிங் போட்டோஸ்.. புகார் அளித்த அனுபமா!

போலி சோஷியல் மீடியா கணக்கு மூலம், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர் மீது நடிகை அனுபமா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்(20) ஒருவர்தான் அப்படி போட்டோக்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அனுபமா மட்டுமின்றி, அப்பெண் பல பிரபலங்களின் பெயரிலும் போலி கணக்குகளை வைத்து, அதில் ஆபாசமான மார்பிங் போட்டோக்களை வெளியிட்டு வருகிறாராம்.
News November 9, 2025
Thar கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்: போலீஸ்

நம்முடைய வாகனம் நாம் எப்படிப்பட்டவர் என்பதை காட்டுவதாக ஹரியானா DGP ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். தார் காரை பார்த்தால் கண்டிப்பாக செக் செய்த பிறகே அனுப்புவோம் என்ற அவர், ரோட்டில் தேவையில்லாத ஸ்டண்ட்டுகள் செய்பவர்களே இதனை வைத்திருப்பதாக கூறினார். மேலும், சமீபத்தில் உதவி ஆணையரின் மகன் தார் காரில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், Thar கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் எனவும் பேசியுள்ளார்.


