News June 28, 2024
Say No To Drugs: மாணவர்களுடன் விஜய் உறுதிமொழி

தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடக் கூடாது என மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவை மாணவர்களுக்கு மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், தவறான பழக்க வழக்கங்களில் நண்பர்கள் ஈடுபட்டால், அவர்களையும் திருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், Say No To Temporary Pleasures, Say No To Drugs எனக் கூறி மாணவர்களையும் அவர் உறுதிமொழியேற்கச் செய்தார்.
Similar News
News March 4, 2026
கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு உதவ ரஷ்யா ரெடி

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட ரஷ்யா முன்வந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா தயாராக உள்ளதாகவும், போர் நிலவரத்தை பொறுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவில் 40-45 நாள்களுக்கான கச்சா எண்ணெய் & பெட்ரோலிய பொருள்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
TN-ல் சாதிவெறி, கலவர அரசியல்.. இயக்குநர் ஆதங்கம்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது அதிகார வெறிக்காக வளர்த்தெடுத்த சாதிவெறியே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என லெனின் பாரதி விமர்சித்துள்ளார். X பதிவில் அவர், திருப்பரங்குன்றத்தில் இல்லாத தீபத்தூணை வைத்து கலவர அரசியலை RSS செய்கிறது என்றும், வெற்று திரைக்கவர்ச்சி அரசியல் மட்டுமே தவெகவிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். TN இன்னும் என்னவெல்லாம் பார்க்கபோகிறதோ எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
News March 4, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.


