News June 28, 2024
அரசியலுக்கு நல்ல தலைவர் தேவை: விஜய்

தமிழகத்தில் அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 10, +2 மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், நன்றாக படித்த மாணவர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், நாட்டில் நடக்கும் விஷயங்களில் உண்மை எது? பொய் எது? என்பதை கண்டறிய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 16, 2026
கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: RS பாரதி

இடையில் வருவதெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் என விஜய்யை, திமுகவின் RS பாரதி சாடியுள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஆருடம் தெரிவித்தார். லயோலாவின் IPDS, Times Now கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது.
News March 16, 2026
யாருடன் கூட்டணி?.. ராமதாஸ் இன்று அறிவிக்கிறார்

ராமதாஸ் தரப்பு (பாமக) இதுவரை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், யாருடன் கூட்டணி செல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தவெக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி உள்ளிட்ட அறிவிப்புகளை ராமதாஸ் இன்று வெளியிட இருப்பதாக அவரது மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
சற்றுமுன்: தேர்தல் ஆணையம் அடுத்த அறிவிப்பு

5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நிலையில், ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்க உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், தமிழ்நாட்டிலும் பல்வேறு மாற்றங்களை செய்ய ECI திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, TN அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமுதா உள்ளிட்டோரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


