News June 28, 2024
செங்கல்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.30 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், செங்கல்பட்டில் 13,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2026
செங்கல்பட்டு: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9487161105, 044-26426421 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
News February 25, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தயாளன் (48), மேல்மருவத்தூர் அருகே செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் நோக்கி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்த அதிவேக ரயில் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 25, 2026
செங்கல்பட்டு: திக்கு முக்காடும் மக்கள்!

கடற்கரை–செங்கல்பட்டு தடத்தில் எழும்பூர் மேம்பாட்டு பணிகளால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 26 ரயில்கள் குறைக்கப்பட்டதால் பயணியர் அவதி தொடர்கிறது. 208 ரயில்கள் 164 ஆக குறைந்துள்ளன. 20,000 பேர் பேருந்து, மெட்ரோ போன்ற மாற்று போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எழும்பூர்–பரங்கிமலையிலிருந்து செங்கல்பட்டு வரை 26 சிறப்பு ரயில்கள் ஏப்.5 வரை இயக்கப்படும்.


