News June 28, 2024

மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

image

புதுகை, நரிமேடு வசந்தபுரி நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.350 பயிற்சியின் முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோா் 04322 225575, 94861 52007 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Similar News

News November 4, 2025

புதுகை தவறி விழுந்து தொழிலாளி பலி!

image

ஆலங்குடி அருகே மாங்கோட்டை தெற்கு பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் 48, சுமை தூக்கும் தொழிலாளி நேற்று வீட்டில் வளர்த்து வரும் மாட்டை பிடித்து கட்ட முயன்ற போது கயிறு காலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்து போனார். இது குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2025

புதுகை: கணவன் விஷம் அருந்தி தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (60). இவருக்கு திருமணமாகி 30 வருடம் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் அவர் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று கைக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் வல்லத்ராக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

புதுகை: பெண்ணுக்கு கத்திக்குத்து!

image

வேப்பங்குடியைச் சேர்ந்தவர் குமரேசன் (33), இவரது மனைவி ராதா (39). குடும்ப தகராறில் ராதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த இருவருக்கும் தகராறு ஏற்பட குமரேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராதாவை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் குமரேசனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!