News June 28, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சிவி.சண்முகம் புகார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், சட்டவிரோதமாக ஈவிஎம் இயந்திரங்களை விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றியுள்ளதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ரா.மணிகண்டன்(38) புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா் . அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News March 6, 2026
விழுப்புரம்: ராமதாஸின் திடீர் ஆலோசனை

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திரளாக பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 6, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


