News June 28, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

Similar News

News September 17, 2025

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (செப். 16) குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புங்கள் – சைபர் பாதுகாப்பு என்பது அனைவரின் வேலை. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 16, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (செப்.16) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News September 16, 2025

கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை!

image

கோவை மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!