News June 28, 2024

நாகை; சீர் மரபினர் மக்களுக்கு அறிவிப்பு

image

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் நேற்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு 04365 – 251562 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Similar News

News August 15, 2025

நாகையில் 193 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை பற்றி அலோசிக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News August 14, 2025

நாகை மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு !

image

நாகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் நாகை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW!

News August 14, 2025

நாகை மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை ஆக.15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நாளை காலை 9.05 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அழைத்துள்ளார்.

error: Content is protected !!