News June 28, 2024
காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 4 நாள்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே பயணிக்கும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலானது ஜூலை 1,2,8,9 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக மைசூரு – சென்னை சென்ட்ரல் ரயில், ஜூலை 2,3,9,10 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் – திருப்பதி – சென்ட்ரல் தினசரி விரைவு ரயில், ஜூலை 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்: அமெரிக்கா

சீனாவை போல இந்தியாவை எங்களது போட்டியாளராக மாற விடமாட்டோம் என டெல்லியில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு; அதை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்யும் எந்த ஒரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனுக்கானது எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டுகிறாரா விஜய்?

ஆரம்பத்தில் தவெகவில் All in All-ஆக வலம் வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த். இடையில் இவர்மீது ஜானுக்கும், ஆதவுக்கும் அதிருப்தி அதிகரித்ததாக பேசப்பட்டது. எனவே ஆனந்த் குறித்து இருவரும் விஜய்யிடம் பலமுறை புகார் வைத்தனராம். போதாத குறைக்கு ஆனந்தின் மேடைபேச்சுகளும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளானதால் விஜய் மொத்தமாக ஆனந்தை ஒதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தவெக மேடைகளில் பேசுவதில்லை என்கின்றனர்.
News March 7, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு!

கடந்த 5 நாள்களாக சரிவைக் கண்டு வந்த தங்கம், இன்று திடீரென உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹15,050-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹720 அதிகரித்து ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையானது மாற்றமின்றி ஒரு கிராம் ₹290-க்கு விற்பனையாகிறது.


