News June 28, 2024
‘கல்கி 2898 ஏடி’ ஓடிடி உரிமத்தை பெற்ற அமேசான்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் வரும் அதிரடி ஆக்ஷன் பிரமாண்ட காட்சிகள், ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக ரசிகர்களின் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமைத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ₹200 கோடி கொடுத்து அமேசான் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Similar News
News March 8, 2026
இலவசம் என்பது வளர்ச்சியல்ல, அது வீழ்ச்சி: சீமான்

இதுவரை இருக்கின்ற அரசியல் கோட்பாடு, நிலைபாட்டில் முற்றிலுமாக தங்கள் கட்சியின் கோட்பாடு மாறுபட்டது என சீமான் பேசியுள்ளார். புதுச்சேரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அனைத்துக்கும் இலவசம் அறிவிக்கிறார்கள். இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம் என்றார். இலவசம் பெற வேண்டிய வறுமை இன்றி மக்களை உயர்த்துவதே தமது கடமை எனவும் தெரிவித்தார்.
News March 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்: அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். ▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
News March 8, 2026
ஜனாதிபதிக்கு நேர்ந்தது வெட்கக்கேடானது: PM மோடி

மேற்கு வங்கத்திற்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை அம்மாநில CM மம்தா பானர்ஜி நேரில் வரவேற்காததை வெட்கக்கேடானது என PM மோடி சாடியுள்ளார். பழங்குடியை சேர்ந்த முர்மு வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; TMC அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்றும், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு TMC-ன் நிர்வாகமே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.


