News June 28, 2024
IND சுழலில் தடுமாறும் ENG

T20 WC அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி, ENG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வருகின்றனர். 3 ஓவர்களை வீசிய அக்ஷர் படேல், 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் போட்ட 2ஆவது ஓவரிலேயே 2 ரன் அடித்திருந்த சாம் கரணை வெளியேற்றினார். 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு ENG 53 ரன்களை எடுத்துள்ளது.
Similar News
News March 7, 2026
ஒரு பக்கம் போர், மறுபக்கம் பூகம்பம்… துயரத்தில் ஈரான்

இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்பில் இருக்கும் ஈரானில், இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஈரானில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக USGS அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செவ்வாயன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கம் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 7, 2026
₹6,600, ₹7,500.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15% அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் விற்பனையாளர்களுக்கு ₹7,500, கட்டுனர்களுக்கு <<19309935>>₹6,600 தொகுப்பூதியம்<<>> ஒரு வருடம் வழங்கப்படும். ஓராண்டுக்குப்பின், விற்பனையாளர்களுக்கு ₹39,600, கட்டுனர்களுக்கு ₹35,000 வரை காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும், 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
News March 7, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து.. புதிய ஆதாரம் வெளியானது

விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க முடியாது என வழக்கறிஞர் மூலம் தனக்கு மிரட்டல் வந்ததாக விஜய்யின் <<19319143>>மனைவி சங்கீதா<<>> செங்கல்பட்டு கோர்ட்டில் புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதில், தனக்கு நீதி கிடைக்கும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க உரிமை உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், விஜய்யின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பொது விவாதமாக மாறி வருகிறது.


