News June 28, 2024
கோலியின் மிக மோசமான சாதனை

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளார். ஒரே டி20 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்கி மிகக்குறைந்த பேட்டிங் சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலில், 10.71 சராசரியுடன் கோலி 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். வங்கதேசத்தின் சௌமியா சர்க்கார் 9.6 சராசரியுடன் முதல் இடத்திலும், ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி 9.8 சராசரியுடன் 2ஆம் இடத்திலும் உள்ளனர்.
Similar News
News September 18, 2025
BREAKING: தவெகவில் முக்கிய மாற்றம் செய்த விஜய்

தவெகவில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை செய்து விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, CTR நிர்மல்குமாருக்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்புடன் ஐடி விங், வழக்கறிஞர் அணியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகனுக்கு ஊடக அணி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகிய 4 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
News September 18, 2025
RAC டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வது எப்படி?

ரயில் புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TTE, உங்களுக்கான இருக்கையை நியமித்து தர வேண்டும் என்ற விதி உள்ளது. *முதலில் TTE-ஐ தொடர்புகொண்டு, காலியாகவுள்ள இருக்கையை ஒதுக்கி தருமாறு முறையிடுங்கள். *Chart தயாரான பிறகு, IRCTC செயலியில் ‘Chart Vacancy’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். *ரயில் எண்ணை உள்ளிட்டால், நீங்கள் செல்லும் ரயிலிலுள்ள காலி இருக்கைகள் காட்டும். *அதை TTE-யிடம் தெரிவித்தும் முறையிடலாம்.
News September 18, 2025
சருமம் பளபளக்க உதவும் ஜூஸ்

பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கின்றன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அவை என்ன ஜூஸ் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க. மேலும், வேறு ஏதேனும் பழம் அல்லது காய்கறி உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.