News June 28, 2024
டி.கே சிவகுமார் முதல்வராக வேண்டும்: மடாதிபதி

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகி, டி.கே.சிவகுமாரிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று வொக்கலிகா சமூக தலைவர் குமார சந்திரசேகரநாத சுவாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் சித்தராமையா முன்னிலையில் இந்த கருத்தை தெரிவித்தார். வொக்கலிகா சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவகுமார் தற்போது துணை முதல்வராக உள்ளார்.
Similar News
News November 6, 2025
விஜய்க்கு குற்ற உணர்ச்சியே இல்லை: வைகோ

கரூர் துயரில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் விஜய் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது தவறான போக்கு என வைகோ விமர்சித்துள்ளார். 41 பேர் உயிரிழப்பில் முழு பொறுப்பேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற வகையில் CM மீது வெறுப்பை கொட்டித் தீர்த்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்தது போல் கற்பனை வாழ்வில் திளைக்கிறார் என்றும் வைகோ கூறியுள்ளார்.
News November 6, 2025
Cinema Roundup: ‘D54’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ கசிந்தது

*‘பராசக்தி’ முதல் சிங்கிள் ‘அடி அலையே’ நாளை மாலை 5:30-க்கு வெளியாகும். *அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ வரும் 21-ம் தேதி வெளியாகும். *ஸ்ரீகாந்த், ஷாம் நடிக்கும் ‘தி ட்ரெய்னர்’ படம் வெளியீட்டுக்கு தயாரானது. *‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் கசிந்தது. *‘கைதி’ மலேசிய ரீமேக் நாளை வெளியாக உள்ளது.
News November 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 6, ஐப்பசி 20 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை


