News June 28, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஜூன் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News October 17, 2025
சாலைகளின் சாதி பெயர்களை நீக்குவதில் சிக்கல்

சாலைகளில் சாதி பெயர்களை மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று மதுரை HC உத்தரவிட்டுள்ளது. TN அரசின் ஆணைக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கருத்து கேட்பு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.
News October 17, 2025
தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின்

கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை HC-ல் அவரது தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டது.
News October 17, 2025
₹500 நோட்டுகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 2024- 25ம் நிதியாண்டில் மட்டும் 2.17 லட்சம் எண்ணிக்கையில் போலி ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 1.17 லட்சம், ₹500 நோட்டுகளாம். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெள்ளை இடம் இருக்கும். அதனை மேலே பிடித்து பார்த்தால் காந்தி முகம் வாட்டர்மார்க்காக தோன்றும். ₹500 நோட்டாக இருந்தால், 500 என்ற எண் அதில் தெரியும். போலி நோட்டு அச்சிடுபவர்களால் இதனை அச்சிட முடியாது. SHARE